Skip to content

Instantly share code, notes, and snippets.

@karthikb351
Last active May 19, 2016 17:44
Show Gist options
  • Save karthikb351/62ba72dc37c62baa7bf59e8839081f62 to your computer and use it in GitHub Desktop.
Save karthikb351/62ba72dc37c62baa7bf59e8839081f62 to your computer and use it in GitHub Desktop.

Much thanks to @nchokkan for translated this document into Tamil

Name of Project

திட்டத்தின் தலைப்பு

Sri Lanka Floods: Western Kelani River Basin

இலங்கை வெள்ளம்: மேற்குக் களனி ஆற்றுப் படுகை

Short Desc

சிறு விவரிப்பு

The Disaster Management Center of Sri Lanka has requested HOT's generating an estimate of the number of buildings affected by flooding in the Kelani River Basin. We'll map all the visible buildings and roads to make this possible.

இலங்கையைச் சேர்ந்த பேரழிவு மேலாண்மை மையமானது HOTஐத் தொடர்புகொண்டு, களனி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கட்டடங்களின் உத்தேசமதிப்பைக் கணக்கிடுமாறு கோரியுள்ளது. இதற்காக, தோன்றக்கூடிய அனைத்துக் கட்டடங்கள் மற்றும் சாலைகளையும் நாம் வரைபடத்தில் பொருத்துவோம்.

Description

விவரிப்பு

The Disaster Management Center of Sri Lanka has requested HOT's generating an estimate of the number of buildings affected by flooding in the Kelani River Basin. We'll map all the visible buildings and roads to make this possible.

இலங்கையைச் சேர்ந்த பேரழிவு மேலாண்மை மையமானது HOTஐத் தொடர்புகொண்டு, களனி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கட்டடங்களின் உத்தேசமதிப்பைக் கணக்கிடுமாறு கோரியுள்ளது. இதற்காக, தோன்றக்கூடிய அனைத்துக் கட்டடங்கள் மற்றும் சாலைகளையும் நாம் வரைபடத்தில் பொருத்துவோம்.

This task covers the western portion of the Kelani River Basin.

இந்தச் செயல்பாடு களனி ஆற்றுப்படுகையின் மேற்குப் பகுதியைக் கவனிக்கும்.

Entities to Map

பொருத்தவேண்டிய அம்சங்கள்

buildings mainly, major roads if needed

முக்கியமாக, கட்டடங்கள். தேவைப்பட்டால், முக்கியச் சாலைகள்

Instructions

குறிப்புகள்

Project specific guidance

திட்டம் தொடர்பான வழிகாட்டல்

  • Please map all the visible buildings you can using the available Bing and/or Mapbox imagery. Add or fix only major roads if needed.
  • கிடைக்கும் Bing மற்றும்/அல்லது Mapbox படங்களைக்கொண்டு, தோன்றுகிற அனைத்துக் கட்டடங்களையும் உங்களால் இயன்றவரை பொருத்துங்கள். தேவைப்பட்டால், முக்கியச் சாலைகளைமட்டும் சேருங்கள் அல்லது சரிசெய்யுங்கள்.
  • Many of these squares will already be partially or fully mapped, map in more if needed or fix up the existing mapping, or just mark it "Done" if it is already complete.
  • இவற்றுள் பெரும்பாலான சதுரங்கள் ஏற்கெனவே பகுதியளவு அல்லது முழுமையாகப் பொருத்தப்பட்டிருக்கும். தேவைப்பட்டால், கூடுதலானவற்றைப் பொருத்துங்கள், அல்லது, ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளவற்றைச் சரிசெய்யுங்கள், அல்லது, அது ஏற்கெனவே பூர்த்தியடைந்திருந்தால், அதனை "Done" எனக் குறியுங்கள்.
  • Be careful not to upset the existing road relationships as the OSM-LK community has invested a lot of time and effort making the road routing work successfully in GPS devices.
  • OSM-LK சமூகமானது நிறைய நேரம், உழைப்பைச் செலவிட்டு GPS சாதனங்களில் சாலைகளின் வழிகளைக் காட்டும் பணியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்துள்ளது. ஆகவே, ஏற்கெனவே உள்ள சாலை உறவுகளைப் பாதித்துவிடாதபடி கவனமாகச் செயல்படுங்கள்.

Buildings

கட்டடங்கள்

  • Please accurately outline all the buildings you can find. The outline should be for the full size of the building even if it is partly covered by trees in the imagery.
  • உங்களால் கண்டறிய இயலுகிற அனைத்துக் கட்டடங்களின் வெளிக்கோட்டையும் துல்லியமாகக் குறிப்பிடுங்கள். ஒருவேளை படத்தில் அது மரங்களால் ஆங்காங்கே மூடப்பட்டிருந்தாலும், அந்த வெளிக்கோடு கட்டடத்தின் முழு அளவையும் காட்டவேண்டும்.
  • It is ok to "split" task squares - Sometimes a task square will have a lot detailed settlement mapping. If you think it would help to make the task square smaller so the mapping could be finished in a more reasonable time, use the "split" link above the task square comment box.
  • பணிச்சதுரங்களைப் "பிரிக்க" அனுமதி உண்டு - சில சமயங்களில் ஒரு பணிச்சதுரத்தில் நிறைய குடியேற்றங்களை விரிவாகப் பொருத்தவேண்டியிருக்கலாம். அந்தப் பணிச்சதுரத்தைச் சிறிதாக்கினால் விரைவில் அதனைப் பொருத்த இயலும் என்று நீங்கள் நினைத்தால், பணிச்சதுரக் கருத்துப் பெட்டிக்கு மேலே உள்ள "split" என்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.
  • After drawing the outline, use the 's' key in the web editor to "square" the corners.
  • வெளிக்கட்டத்தை வரைந்தபிறகு, இணைய எடிட்டரில் உள்ள 's' என்ற விசையைப் பயன்படுத்தி, மூலைகளைச் "சதுரமாக்குங்கள்".
  • Many buildings are very close, but do not actually touch each other, try to map them close to each other without letting them connect or share nodes with each other, roads or residential area outlines.
  • பல கட்டடங்கள் மிக அருகே இருக்கும், ஆனால், உண்மையில் அவை ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்காது. அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அவற்றை அருகருகே பொருத்தும்போது, அவை ஒன்றோடொன்று இணையாதபடி, அல்லது, ஒன்றோடொன்று முனைகளைப் பகிர்ந்துகொள்ளாதபடி, சாலைகள் அல்லது குடியிருப்புப் பகுதிகளோடு அவை ஒருங்கிணையாதபடி அவற்றைப் பொருத்த முயற்சி செய்யுங்கள்.
  • In the iD web editor, the first time you map a building you will use the "Building" category and then at the bottom of the list select "Building" again, this is the most generic building tag we can use as we almost never can tell the more specific use of any building from imagery alone.
  • iD இணைய எடிட்டரில், முதன்முறையாக நீங்கள் ஒரு கட்டடத்தைப் பொருத்தும்போது, நீங்கள் "Building" என்ற வகையைப் பயன்படுத்துவீர்கள், பிறகு, அந்தப் பட்டியலின் கீழே "Building" என்பதை மீண்டும் தேர்ந்தெடுப்பீர்கள். இதுதான் நாம் பயன்படுத்தக்கூடிய மிகவும் பொதுவான கட்டடக் குறிச்சொல் ஆகும். ஏனெனில், வெறும் படத்தைமட்டும்வைத்து அந்தக் கட்டடத்தின் குறிப்பிட்ட பயன்பாட்டை நம்மால் அநேகமாகச் சொல்ல இயலாது.
  • If you have personal knowledge of a building, please add that information to the building, like the name or type of building (hospital, school, gas station, etc)
  • அந்தக் கட்டடம் எது என்று உங்களுக்கு ஏற்கெனவே தனிப்பட்டமுறையில் தெரிந்திருந்தால், தயவுசெய்து அந்த விவரங்களைக் கட்டடத்தில் சேருங்கள். உதாரணமாக, கட்டடத்தின் பெயர், வகை (மருத்துவமனை, பள்ளி, கேஸ் ஸ்டேஷன் போன்றவை)

General mapping guidance

பொதுவான பொருத்தல் வழிகாட்டல்

  • Invalidated task squares - You might get a notice that a task square was "invalidated" that almost always just means someone found a few more things to map and they did not have time to map them in.
  • செல்லுபடியற்றதாக்கப்பட்ட பணிச்சதுரங்கள் - சில சமயங்களில் ஒரு பணிச்சதுரம் "செல்லுபடியற்றதாக்கப்பட்டுவிட்டதாக" உங்களுக்கு ஓர் அறிவிப்பு வரலாம். அநேகமாக இதன்பொருள், யாரோ மேலும் சில விவரங்களைப் பொருத்த முயன்றிருக்கிறார்கள், ஆனால், அவர்களால் அவற்றை முழுமையாகப் பொருத்த இயலவில்லை, அவர்களுக்கு நேரம் போதவில்லை.
  • No worries, it is part of the process and happens all the time.
  • இதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். இது எப்போதும் நிகழ்வதுதான்.
  • If you have to stop mapping before you have mapped everything use the "Unlock" link instead of "Done" As long as you are trying to map everything in a task square you feel confident mapping before you mark one "Done" then all is good.
  • எல்லாவற்றையும் பொருத்துமுன் நீங்கள் பொருத்துதலை நிறுத்தவேண்டியிருந்தால், "Done"க்குப் பதிலாக "Unlock" என்ற இணைப்பைப் பயன்படுத்துங்கள். ஒரு பணிச்சதுரத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் பொருத்திவிட்டீர்கள் என நம்பினால், அப்போது ஒருமுறை "Done"ஐ க்ளிக் செய்தால் போதும்.
  • Ask questions - if you have questions, please ask. The front page of this HOT Tasking Manager website offers a few ways to ask or if you are at a mapping event, raise your hand and ask.
  • கேள்விகளைக் கேளுங்கள் - உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து கேளுங்கள். இந்த HOT பணி மேலாளர் இணையத்தளத்தின் முன்பக்கத்தில் கேள்வி கேட்பதற்கான சில வழிகளைக் குறிப்பிடுகிறது. ஒருவேளை நீங்கள் ஒரு பொருத்துதல் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டிருந்தால், கையை உயர்த்திக் கேள்வி கேளுங்கள்.
  • You are making a real difference mapping - Every contribution matters in a real, tangible way. Mapping is not easy but know that your mapping is used by the Disaster Management Centre of Sri Lanka in near real time.
  • இந்தப் பொருத்துதலின்மூலம் நீங்கள் ஒரு நிஜமான மாற்றத்தைக் கொண்டுவருகிறீர்கள் - உங்களுடைய ஒவ்வொரு பங்களிப்பும் ஒரு நிஜமான, உறுதியான முறையில் பலன் தருகிறது. இந்தப் பொருத்துதல் செயல் எளிதல்ல, ஆனால், உங்களுடைய பொருத்துதல் விவரங்கள் இலங்கையில் உள்ள பேரழிவு மேலாண்மை மையத்தால் கிட்டத்தட்ட உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

Tagging

குறிச்சொற்கள் சேர்த்தல்

See Sri Lanka Tagging Guidelines for local mapping guidance.

உள்ளூர் பொருத்துதல் வழிகாட்டுதலுக்கு, இலங்கைக் குறிச்சொற்கள் சேர்த்தல் வழிகாட்டிகளைக் காணவும்

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment