Skip to content

Instantly share code, notes, and snippets.

@psankar
Last active October 10, 2015 02:37
Show Gist options
  • Star 0 You must be signed in to star a gist
  • Fork 0 You must be signed in to fork a gist
  • Save psankar/3619300 to your computer and use it in GitHub Desktop.
Save psankar/3619300 to your computer and use it in GitHub Desktop.
venpa
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி தேவதை
பாடிக் கொடுத்த பொலிவுறு பாக்களைத்
தேடிப் படிக்க தெரிந்தது காதலுடன்
கூடிக் களித்திடும் அன்பு
==============
கதிரவன் சிந்திய கீற்றுகள் சூட்டில்
சுதியொடு கூவிய சுந்தரப் பாட்டில்
துயிலது நீங்கிய தாமரைச் செண்டே
மயிலது நாணிட மென்னடை கொண்டே
அரிசி கொதிக்க அடுப்பினை மூட்டி
பருப்பும் மிளகும் பதமாய் பிணைந்திட
நெய்யொழுக வெண்பொங்கல் தா
(பெமினிஸ்டுகள் மன்னிக்கவும்)
===============
இராவணன் உயிரோடிருக்கையில், அவன் சபையில்,
புலவனாகிய நான் சென்று, அவனை அழைப்பதாய் கற்பனை செய்து பாடியது.
கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல்
வானுறை தேவரை வெட்கிடச் செய்திடும் வில்லவனே
தேனுறை வீணையில் துள்ளிசை பாடிடும் வல்லவனே
மானிழைக் கண்ணியை மாசறு பொன்னெனக் காப்பவனே
ஊனினை வாட்டிடும் உன்னதக் காதலன் ராவணனே
கடைசி இரு அடிகளுக்குப் பொருள்:
மான் போன்ற கண்களுடைய பெண்ணை (சீதையை) மாசு இல்லாத பொன் போல பாதுகாப்பவனே (தனியாக வனத்தில் தானே வைத்திருந்தார் தலைவர்)
சீதையின் உடலை கோபத்தாலும், ராமனின் உடலை தாபத்தாலும், படிப்போர் உடலை சோகத்தாலும் வாட்டும் காதலன் இராவணன்
=================
அமலா
மாறனின் அம்பாய் மனிதரைத் தாக்கிடும்
ஏறன மில்லா எழிலினைத் தூக்கிடும்
பூரணச் சிற்பமே பூக்களின் வெட்கமே
வாரணத் தந்தமே வாலிபச் சந்தமே
தோரணத் தூக்கமும் தொல்லையே அ(ம்)மலா
காரணம் உன்னாட்சி அமலா ?
உலகத் தழகெல்லாம் ஓர்தட்டு வந்தும்
பலமின்றித் தோற்றிடுமே உன்முன் - மலரிணையே
யாரெங்கு தேடிடினும் என்அமலா வைப்போல
வேறெங்கும் உண்டோ விளம்பு
=============
காபி
தோப்பினில் காய்த்துபின் தொங்கிடும் காய்களின்
மூப்பினை ஆய்ந்துபின் மென்னியைப் பிய்த்தபின்
தீக்கனல் சுட்டபின் தூளாய்ப் பொடித்ததை
ஆக்களின் பாலுடன் ஆக்கிக் குடி
===============
ஓயாது (உ)ழைக்கும் உத்தமனை
... ஊரார் எல்லாம் பழிக்கின்றார்
அன்பி லதனை அறம்போல
... என்புடை யோரை(யும்) இடித்தானாம்
ஊனை நடுக்கும் குளிரைவிட
... ஊனை நனைக்கும் வெயிலேமேல்
காடு கழனி மரமெல்லாம்
... கொள்ளை ஆகிப் போனதனால்
நாடு முழுதும் நிழலின்றி
... நாளும் வெ(ய்)யிலில் வாடுகிறோம்
ஆளுக் கொருமரம் வளர்த்திடுவோம்
... அழகுப் புவியை குளிர்விப்போம்
===
கோணச் சிரிப்பழகும் கோவையிலா பேச்சழகும்
தேனின் இதழழகும் தீமையிலா பொய்யழகும்
கூனும் நடையழகும் குற்றமிலா சொல்லழகும்
நானும் புசித்தேன் நனி
கூனும் நடையழகும் = தவழுதல்
நனி = அதிகம்
@arunnura123
Copy link

That was great !!!!

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment