- வானகங்கள் - சுவர்க்கம் (Heaven) தரவு: வையகமும் வானகமும் ஆற்றல் அரிது (குறள் எண்:101, அறத்துப் பால், இல்லற இயல், அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்)
- ஊழ்கம் - தியானம்; செயமோகன் வலைப்பதிவு
- பத்தி - வரிசை section
- பருவடிவம் - Physical Form (திடப்பொருள்)
- சகடை - சக்கரம், தேர்
- மன்று - மன்றம், மரத்தடியில் உள்ள ஊர்ப் பொதுத் திண்ணை, மக்கள் அமர்ந்து பேசும் ஊருக்கான பொது இடம்
- சாமரவால் - மயிர்த் தொகுதி மிக்க வால் (ஒரே திரளாக இல்லாது, பல திரளாக அமைந்தது சா+மரம்)
- கவந்தம் - தலையில்லாத, தலை இல்லாத மரம்
- கார்மிகர் - கர்மம் (கருமம்) செய்பவர் (வேத வைதீகர்களில், கர்ம மீமாம்சைப் பிரிவினைச் சார்ந்தவர், இறை வழிபாடு தேவையில்லை; கர்மாக்களே போதும் எனும் பிரிவு)
- மணை - சிறிய படி, தரையில் வைக்கும் மரப்பலகை அதன் மேல் அமர்ந்து கொள்ளலாம்
- அரணிக்கட்டை - அரணி, உரசியோ / உராய்ந்தோ தீப்பற்ற வைக்கும் மரக் கருவி
- ஹோதா - ரிக் வேதம் ஓதி, யாகம் செய்பவர் (ரிக்= ஹோதா, யஜூர்= அத்வர்யு, சாம= உத்காதா எனும் 3 வைதீகர்கள் ஹோதா, மிக உயர்ந்த நிலை என்பதால், "என்ன ரொம்ப தான் ஹோதா பண்ணுற?" எனும் பார்ப்பனச் சொலவம்)
- பல்லியம் - பல்வேறு கருவிகளும் ஒலிகளும் சேர்ந்து ஒலிக்கும் இசை, பல்+இயம்
- ஈற்றறை - குழந்தை பிறக்கும் அறை; Delivery room
- சிதல் புற்று - கறையான் புற்று
- பூர்ணாகுதி - யாகத்தின் முடிவில் (பூர்ணத்தில்), தேவதைக்குத் தரப்படும் காணிக்கை (ஆஹூதி)
- உறிக்குடில் - உரிக்குடில் (றகரம் பிழை, ரகரம் சரி) (எல்லாம் உரித்துப் போட்டு எளிமையாய் வாழும் தவசிகளின் குடில், இக்காலத்தில், திடக் கழிவு உரங்களை மக்க வைக்கும் குடிலும் கூட)
- புடவி - பிரபஞ்சம், Universe
- புலரி - கதிரவன், விடியல், வைகறைப் பொழுது
- கிணையொலி - கிணை + ஒலி, கிணை என்றால் உடுக்கை
- யானம் - ஏனம், வாய் அகண்ட பாத்திரம்
- வைணிகன் - வீணை வாசிப்பவன்
- பினாகம் - திரிசூலம்; பிநாகம் - நாகத்தால் செய்யப்பட்ட வில்
- தமருகம் - உடுக்கை
- மழு - சிவனின் ஆயுதங்களுள் ஒன்று
- ஆடி- பிரதிபலிக்கும் கண்ணாடி; Mirror
- மஞ்சல் - ??? மஞ்சம் ?
- புளகம் - புளகாங்கிதம்
- கவிகை - அரசனின் குடை
- பொதிக்கால் - பந்தல் கால் ???
- தாலம் - தட்டு; தால் என்ற வேர்ச்சொல்லுக்கு நாக்கு என்று பொருள்.
- பாவட்டம் - ???
- ஒருக்குதல் - ??? ஒன்றுசேர்த்தல் என்று அகராதி சொல்லுகிறது. ஆனால் இங்கு பொருந்தவில்லை
- புனுகு - புனுகுப்பூனை என்ற விலங்கிடம் இருந்து எடுக்கப்படும் வாசனைப் பொருள்
- இளிவரல் - இகழ்ச்சி
- சிமிழ்தலைப்பட்டு - ??? கட்டுதல் என்று அகராதி சொல்லுகிறது
- அத்திரி - குதிரை, ஒட்டகம், கோவேறுகழுதை போன்ற பொதி சுமக்கும் விலங்குகள்
- மிச்சில் - எச்சில், எஞ்சிய பொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23). எச்சில்.உண்டொழி மிச்சிலும் (சிலப். 15, 169). (பிங்.)
- பெருங்களர்வா - Salvadora indica, உகாய்
- மடம்பு - ???
- மந்தணம் - Secret
முதற்கனல் 1 - வேள்விமுகம் 1
*வானகம் = சுவர்க்கம் (Heaven)
தரவு: வையகமும் வானகமும் ஆற்றல் அரிது
(குறள் எண்:101, அறத்துப் பால், இல்லற இயல், அதிகாரம்: செய்ந்நன்றியறிதல்)
முதற்கனல் 2 - வேள்விமுகம் 2
*பருவடிவம் = Physical Form (திடப்பொருள்)
*சாமரவால் = மயிர்த் தொகுதி மிக்க வால்
(ஒரே திரளாக இல்லாது, பல திரளாக அமைந்தது சா+மரம்)
*கார்மிகர் = கர்மம் (கருமம்) செய்பவர்
(வேத வைதீகர்களில், கர்ம மீமாம்சைப் பிரிவினைச் சார்ந்தவர்
இறை வழிபாடு தேவையில்லை; கர்மாக்களே போதும் எனும் பிரிவு)
*ஹோதா = ரிக் வேதம் ஓதி, யாகம் செய்பவர்
(ரிக்= ஹோதா, யஜூர்= அத்வர்யு, சாம= உத்காதா எனும் 3 வைதீகர்கள்
ஹோதா, மிக உயர்ந்த நிலை என்பதால்,
”என்ன ரொம்ப தான் ஹோதா பண்ணுற?” எனும் பிராமணச் சொலவம்)
முதற்கனல் 3 - வேள்விமுகம் 3
*பூர்ணாஹூதி = யாகத்தின் முடிவில் (பூர்ணத்தில்), தேவதைக்குத் தரப்படும் காணிக்கை (ஆஹூதி)
முதற்கனல் 5 - வேள்விமுகம் 5
*உறிக்குடில் = உரிக்குடில் (றகரம் பிழை, ரகரம் சரி)
(எல்லாம் உரித்துப் போட்டு எளிமையாய் வாழும் தவசிகளின் குடில்
இக்காலத்தில், திடக் கழிவு உரங்களை மக்க வைக்கும் குடிலும் கூட)