Skip to content

Instantly share code, notes, and snippets.

@sundararajana
Created October 26, 2014 11:03
Show Gist options
  • Star 1 You must be signed in to star a gist
  • Fork 0 You must be signed in to fork a gist
  • Save sundararajana/b7ca467063a9bc2bf101 to your computer and use it in GitHub Desktop.
Save sundararajana/b7ca467063a9bc2bf101 to your computer and use it in GitHub Desktop.
தேதி தெரிந்தால் அந்நாளின் கிழமை அறிவது எப்படி?
இந்தியாவின் சுதந்திர தினம் என்ன? அது சுலபம்: 15 ஆகஸ்டு 1947. அந்நாளின் கிழமை என்ன?
வெள்ளி. தேதி தெரிந்தால் அந்நாளின் கிழமை அறிவது எப்படி?
* ஒரு வருடத்தின் பிப்ரவரி கடைசி நாளை "டூம்ஸ்டே" (doomsday) எனக் கொள்வோம்.
அதாவது பிப்ரவரி 28 அல்லது 29 (லீப் வருடமானால்). "டூம்ஸ்டே"-யின் கிழமை தெரிந்தால்
வருடத்தின் எந்த நாளின் கிழமையையும் நாம் கணக்கிடலாம்.
* டூம்ஸ்டே அன்று என்ன கிழமையோ அதே கிழமை ஏப்ரல் 4, ஜுன் 6, ஆகஸ்டு 8,
அக்டோபர் 10, டிஸம்பர் 12 ஆகிய நாட்களிலும் வரும். எ.கா: 2014-ன் பிப்ரவரி 28.
அதாவது டூம்ஸ்டே அன்று வெள்ளிக்கிழமை. 2014 டிஸம்பர் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை!
அதாவது 2014-ஆம் ஆண்டு 4/4, 6/6, 8/8, 10/10, 12/12 ஆம் தேதிகளும் வெள்ளிக்கிழமையே!
* மே 9, ஜூலை 11, செப்டம்பர் 5, நவம்பர் 7 ஆகிய நாட்களிலும் டூம்ஸ்டே கிழமையே!
எவ்வாறு நினைவில் கொள்வது? "நான் 7-11 கடையில் 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்கிறேன்"
என்பதை நினைவில் கொள்க. அதாவது 7-ஆம் மாதத்தின் 11-ஆம் நாள், 11-ஆம் மாதத்தின் 7-ஆம் நாள்,
9-ஆம் மாதத்தின் 5-ஆம் நாள், 5-ஆம் மாதத்தின் 9-ஆம் நாள் ஆகிய நாட்களில் டூம்ஸ்டே-யின் கிழமையே
வரும். எ.கா: 2014 ஜுலை 11 அன்று வெள்ளிக் கிழமை.
* மார்ச்? ஒவ்வொரு மார்ச் 7-ஆம் தேதி டூம்ஸ்டே. அதாவது மார்ச் 7, 2014 அன்று வெள்ளிக் கிழமை.
* ஜனவரி? லீப் வருடமானால் 4 ஜனவரி அன்றும், லீப் வருடம் இல்லாவிட்டால் 3 ஜனவரி அன்றும்
டூம்ஸ்டே. 2014 ஜனவரி 3-ஆம் தேதி வெள்ளிக் கிழமை. (2014 லீப் வருடம் அல்ல).
* இவற்றை வைத்து ஒரு வருடத்தின் எந்த தேதியின் கிழமையையும் அறியலாம்! எ.கா. ஆகஸ்டு 15, 2014-ன்
கிழமை என்ன? ஆகஸ்டு 8 அன்று டூம்ஸ்டே. ஆகஸ்டு 15-ம் (7 நாட்கள் கழிந்து வருவதால்) ஒரு
டூம்ஸ்டே-தான். ஆக 2014 ஆகஸ்டு 15 அன்றும் வெள்ளியே! 2014 ஜுலை 4 அன்று என்ன கிழமை? ஜுலை 11
அன்று டூம்ஸ்டே. எனவே அன்று வெள்ளி. ஜுலை 4-ஆம் தேதி ஜுலை 11-க்கு 7 நாட்கள் முன்பு வருவதால்
அன்றும் வெள்ளியே! 2014 டிசம்பர் 25 என்ன கிழமை? டிஸம்பர் 12 டூம்ஸ்டே. 12 + 7 + 6 = 25. அதாவது
டிஸம்பர் 25 ஆம் தேதி வெள்ளியிலிருந்து 6 நாட்களுக்குப் பின் வரும். அதாவது வியாழக்கிழமை.
* ஒரு வருடத்தின் டூம்ஸ்டே-யின் கிழமை தெரியாவிட்டால் எவ்வாறு கணக்கிடுவது? நூற்றாண்டின் தொடக்கத்தின்
டூம்ஸ்டே தெரிந்தால் எந்த ஆண்டின் டூம்ஸ்டே-யையும் அறியலாம். எப்படி? 2000-ம் ஆண்டின் டூம்ஸ்டே
செவ்வாய்க் கிழமை. 2048-ன் டூம்ஸ்டே என்ன?
1) கொடுக்கப்பட்ட ஆண்டை நூற்றாண்டிலிருந்து கழிக்கவும்:
2048 - 2000 = 48
2) வரும் விடையை 12-ஆல் வகுக்கவும்:
48/12 ஈவு: 4 மீதி: 0
3) மீதியை 4-ஆல் வகுக்கவும்:
0/4 ஈவு: 0
4) (2)-ல் வரும் ஈவு + மீதி + (3)-ல் வரும் ஈவு ஆகியவற்றை கூட்டவும்.
4 + 0 + 0 = 4
(4)-ல் வரும் எண்ணை நுற்றாண்டின் டூம்ஸ்டே உடன் கூட்ட கொடுக்கப்பட்ட ஆண்டின் டூம்ஸ்டே
கிடைக்கும். அதாவது 2048-ன் டூம்ஸ்டே = 2000-ன் டூம்ஸ்டே + 4 = செவ்வாய் + 4 = சனி. அதாவது
2048 பிப்ரவரி 29 அன்று சனிக் கிழமை.
இன்னுமொரு எ.கா: 2067-ம் ஆண்டின் டூம்ஸ்டே என்ன?
1) 2067 - 2000 = 67
2) 67/12 ஈவு : 5 மீதி 7
3) 7/4 ஈவு : 1
4) 5 + 7 + 1 = 13
2067-ன் டூம்ஸ்டே = 2000-ன் டூம்ஸ்டே + 13 = செவ்வாய் + 13 = செவ்வாய் - 1 = திங்கள்!
அதாவது 2067 பிப்ரவரி 28 அன்று திங்கட்கிழமை.
* சரி. நூற்றாண்டின் தொடக்க ஆண்டின் டூம்ஸ்டே-யை எவ்வாறு அறிவது? மனப்பாடம்தான் ;-)
1700 - ஞாயிறு
1800 - வெள்ளி
1900 - புதன்
2000 - செவ்வாய்
400 ஆண்டுகளுக்குப் பிறகு சுழற்சியாக திரும்ப வரும்.
2100 - ஞாயிறு
2200 - வெள்ளி
2300 - புதன்
2400 - செவ்வாய்
....
* முழு எ.கா: காந்தி பிறந்த கிழமை என்ன? காந்தி பிறந்த தினம் அக்டோபர் 2, 1869.
* 1869-ஆம் ஆண்டின் டூம்ஸ்டே
1869 - 1800 = 69
69/12 ஈவு : 5 மீதி = 9
9/4 ஈவு : 2
5 + 9 + 2 = 16
1869-ன் டூம்ஸ்டே = 1800-ன் டூம்ஸ்டே + 16 = 1800-ம் டூம்ஸ்டே + 2 = வெள்ளி + 2 = ஞாயிறு
* அக்டோபர் 10 டூம்ஸ்டே. அப்படியானால் அக்டோபர் 2 எட்டு நாட்கள் முன்பு.
அதாவது ஞாயிறு - 8 = சனி!
* காந்தி பிறந்தது சனிக்கிழமை!
* http://www.timeanddate.com/calendar/?year=1869
* மற்றுமொரு முழு எ. கா: டாக்டர் அம்பேத்கர் பிறந்த கிழமை என்ன? அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14, 1891
* 1891-ஆம் ஆண்டின் டூம்ஸ்டே
1891 - 1800 = 91
91/12 ஈவு : 7, மீதி: 7
7/4 ஈவு: 1
7 + 7 + 1 = 15
1891-ன் டூம்ஸ்டே = 1800-ன் டூம்ஸ்டே + 15 = வெள்ளி + 15 = வெள்ளி + 1 = சனி.
* ஏப்ரல் 4 அன்று டூம்ஸ்டே. அதாவது 1891 ஏப்ரல் 4 அன்று சனி. அப்படியானால்
ஏப்ரல் 14 = ஏப்ரல் 4 + 10 = சனி + 10 = சனி + 7 + 3 = சனி + 3 = செவ்வாய்
* டாக்டர் அம்பேத்கர் பிறந்தது செவ்வாய்க்கிழமை!
* http://www.timeanddate.com/calendar/?year=1891
என்ன யோசிக்கிறீங்க? உங்க திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாட்கள் ஆகியவற்றின் கிழமைகளை
கணக்கிட்டு எல்லாரையும் அசத்துங்க! என்ன தேதி நினைவில்லையா? அப்ப சரி உங்களுக்கு "டூம்ஸ்டேதான்",
வழக்கம்போல வீட்ல வாங்கி கட்டிக்குங்க ;-)
நன்றி: http://rudy.ca/doomsday-other-years.html
@sundararajana
Copy link
Author

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment